SIVAKASI WEATHER
Sivakasi - Open Chess Competition 2011

05-03-2011
சிவகாசியில் ஓப்பன் செஸ் போட்டி

சிவகாசி, மார்ச் 3: சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் திஷா திட்டத்தின் ஆதரவுடன் ஓப்பன் மற்றும் சிறுவர், சிறுமியர் செஸ் விளையாட்டுப் போட்டிகளை சிவகாசி செஸ் கிளப் மார்ச் 5 மற்றும் 6-ம் தேதி நடத்துகிறது.

காமராஜ் ஜுனியர் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் போட்டிகள் நடைபெறும். போட்டிக்கு மொத்த பரிசுத் தொகை ரூ.10,000. ஓப்பன் பிரிவில் முதல் பரிசு ரூ.2,000.

9, 11, 13 மற்றும் 17 வயதிற்குள்பட்டோர் பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் 5 சிறுவர்களுக்கும், 5 சிறுமிகளுக்கும் பரிசு வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் மார்ச் 4-ம் தேதிக்குள் 9443155852 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என சிவகாசி செஸ் கிளப் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


News & Events
top