SIVAKASI WEATHER
CD on eye donation

24-01-2011
சிவகாசி, ஜன. 23: சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் சார்பில் கண்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய சி.டி. வெளியிடப்பட்டதாக, கண் தான மாவட்டத் தலைவர் ஜே. கணேஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் சார்பில் இதுவரை 391 கண் தான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் தவிர, வெளிமாவட்டங்களிலும், கேரள மாநிலத்திலும் கண் தான விழிப்புணர்வு முகாம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 364 ஜோடி கண்களை தானமாக பெற்று, பார்வையில்லாதவர்களுக்கு ஒளியேற்றியுள்ளோம்.

கண் தானம் குறித்த குறுந்தட்டு (சி.டி.) தயாரிக்கப்பட்டு தேவையான தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். தற்போது 38 நிமிடம் இயங்கக் கூடிய கண் தானம் குறித்த குறுந்தட்டு புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகர், நடிகையர் பாக்கியராஜ், டெல்லிகணேஷ், நாசர், வடிவ&#

News & Events
top