SIVAKASI WEATHER
Election 2011 - Training for Zonal level officers

14-03-2011
தேர்தல் - மண்டல அலுவலர்களுக்குப் பயிற்சி

சிவகாசி, மார்ச் 13: சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் பணிபுரிய இருக்கும் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு கோட்டாட்சியர் சி.முனுசாமி தலைமை வகித்தார்.

இதில் மண்டல தேர்தல் அலுவலர்கள் 20 பேர் மற்றும் தேர்தலின்போது வாக்குச் சாவடிகளில் சோதனை செய்யும் பறக்கும் படையில் உள்ளவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வட்டாட்டாசியர் ராமச்சந்திரன், தேர்தல் தனி வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராஜகோபால் பயிற்சி அளித்தார்.

News & Events
top