SIVAKASI WEATHER
Training for Booth Slip providing Officers - Election 2011 Sivakasi Assembly constituency

01-04-2011
பூத் சிலிப் வழங்கும் அலுவலர்களுக்குப் பயிற்சி

சிவகாசி, மார்ச் 30: சிவகாசி சட்டப்பேரவை தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் அலுவலர்களுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள திரையரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்தில் சிவகாசி கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சி.முனுசாமி கலந்து கொண்டு பேசியதாவது:

ஏப்ரல் முதல் தேதி முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட உள்ளது. வாக்களர் பட்டியலைச் சரிபார்த்து சிலப் வழங்க வேண்டும். இந்தப் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும். ஒரே இடத்தில் இருந்து கொண்டு வழங்கக் கூடாது.

அரசியல் கட்சி சார்ந்தவர்களை அழைத்துக் கொண்டு செல்லக் கூடாது.

வாக்காளர்களை நீங்கள் இருக்கும் இடத்துக்கு வரும்படி சொல்லக் கூடாது என்றார்.

நிகழ்ச்சியில், வட்டாட்சியர் ராமச்சந்திர&#

News & Events
top