SIVAKASI WEATHER
Sivakasi - Non Going School Students

23-04-2011
சிவகாசி ஒன்றியப் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

சிவகாசி, ஏப். 22: சிவகாசி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளில் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பவர்கள் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கணக்கெடுத்தனர்.

தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கடந்த 15-ம் தேதி முதல் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வந்தது.

இப்பணி சிவகாசி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் நடைபெற்றது. இப்பணி ஏப்ரல் 22-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 54 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 313 கிராமங்கள் உள்ளன. இதில் கணக்கெடுப்புப் பணியை 24 ஆசிரியர்கள் செய்தனர். இந்தப் பணிகளை மூன்று சிறப்பு ஆசிரியர்கள் ஆய்வு செய்தனர்.

கிராமங்களில் வசிக்கும் தகுதியுள்ள 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்கிறார்களா?. இல்லை என்றால் என்ன காரணத்திற்காக செல்லவĬ

News & Events
top