SIVAKASI WEATHER
GST கிளவுட் பில்லிங்

24-07-2017
GST கிளவுட் பில்லிங் சாப்ட்வேரை தயாரித்து அசத்தும் சிவகாசி ராஜேஷ்

GST அமலுக்கு வந்த பின் அனைவரும் எப்படி பில் போடுவது, ரிட்டர்ன் பைல் செய்வது எப்படி என்று யோசித்து கொண்டிருக்கும் நிலையில், சிவகாசியை சேர்ந்த பவள ராஜேஷ் குமார் எனும் இளைஞர், GST கிளவுட் பில்லிங் சாப்ட்வேரை தயாரித்து சாதித்துள்ளார்.

"Smart Office" எனும் இந்த GST கிளவுட் பில்லிங் சாப்ட்வேரில் ஆன்லைனில் எந்த நேரத்திலும், எந்த ஊரிலிருந்தும் GST பில் போடும் வசதியை இவரது நிறுவனம் தந்துள்ளது. Reportsகளை பிரிண்ட் எடுத்து கொள்ளவும் உதவுகிறது. எக்சல் பைலிலிருந்து எளிதில் ரிட்டர்ன் பைல் செய்து கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. GST "Smart Office"ல் journal, ledger, trial balance, balance sheet அதுவாகவே தயாரித்து விடுகிறது.

மேலும் இது பற்றி அவர் கூறுகையில் "எங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவு கிளவுட் முறையில் தான் இயங்கி கொண்டிருக்கிறது. GST வருகையால் எங்களது "Smart Office"க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆரம்பித்த ஒரே நாளில் 3 ஆர்டர்களை பெற்றுள்ளோம். 1 லட்சம் வாடிக்கையாளர்களை அடைவதே எங்களது இலக்கு. கம்ப்யூட்டர் மட்டுமின்றி உங்கள் ஸ்மார்ட் போன், Tab-லும் GST பில் போடலாம். உங்களது வாடிக்கையாளருக்கு நீங்கள் போட்ட பில்லை அவரும் பாஸ்வர்ட் உதவியுடன் பார்த்துக் கொள்ளலாம்."

"எங்களது நிறுவன தாரக மந்திரமே ஒரு வேலையை எளிமையாக செய்து முடிப்பதற்கான மொபைல் ஆப், சாப்ட்வேர் செய்து தருவதே. எல்லாமே டிஜிட்டல் மயமாகி வரும் உலகில், உங்கள் officeம் டிஜிட்டல் முறைக்கு மாறுவது உங்களது நிறுவனத்தின் வளர்ச்சியே. இனி உங்கள் ஆபீஸ் கணக்குகள் உங்கள் விரல் நுனியில்." என்றார்.

வாழ்த்துக்கள் திரு.பவள ராஜேஷ் குமார்.

இவரை பாராட்ட நினைத்தால் +91-944-360-44-00 என்ற எண்ணில் நீங்களும் வாழ்த்தலாம்.

- ரமேஷ்


News & Events
top