SIVAKASI WEATHER
பாதுகாப்பான தீபாவளிக்கு 15 ஆலோசனைகள்

05-10-2017
பாதுகாப்பான தீபாவளிக்கு 15 ஆலோசனைகள்: வாகனங்கள், பெட்ரோல் பங்க் அருகே பட்டாசு கொளுத்தக் கூடாது - இரவு 10 மணி வரைதான் வெடிக்க வேண்டும்

பட்டாசு, மத்தாப்புகளை பாதுகாப் பாக கொளுத்த போலீஸார் 15 ஆலோசனைகளை வழங்கியுள் ளனர். பெட்ரோல் பங்க், குடிசைகள், வாகனங்கள், பட்டாசு கடைகள், விலங்குகளுக்கு அருகில் பட்டாசு களை கொளுத்தக்கூடாது. இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு கொளுத் தக் கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி, சிறுவர்கள் முதல் பெரி யவர்கள் வரை புத்தாடை அணிந்து, பட்டாசு வெடிப்பது வழக்கம். கவனக் குறைவாக பட்டாசு வெடிக்கும் போது, கொளுத்துபவர்கள் மட்டு மல்லாது, வேடிக்கை பார்ப்பவர்கள், சாலையில் செல்பவர்கள்கூட சில நேரங்களில் காயம் அடைகின்றனர். விபத்தை தவிர்க்கவும், பாதுகாப் பான முறையில் பட்டாசு வெடிக் கவும் சென்னை போலீஸார் 15 ஆலோ சனைகளை வழங்கியுள்ளனர். அதன் விவரம்:

* காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக அளவு ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது.

* எளிதில் தீப்பிடிக்கும் பொருட் கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பைக், கார், பேருந்து போன்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களின் அருகிலும், பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் இடம், பெட்ரோல் பங்க் அருகிலும் பட்டாசு வெடிக்கக் கூடாது.

* பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப் பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

* பட்டாசு வெடிப்பதில் கவனக் குறைவு கூடாது. மக்கள் நடமாட் டம் உள்ள இடத்தில் மிகுந்த கவ னத்துடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

* பட்டாசு மீது தகர டப்பாக்களை போட்டு மூடி, வேடிக்கை பார்த்தால், அது வெடிக்கும்போது டப்பா தூக்கி எறியப்பட்டு, விபத்துகள் நேரிடக்கூடும்.

* குடிசைப் பகுதியிலும் மாடிக் கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது.

* எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது.

* ஈரமுள்ள பட்டாசுகளை அடுப் பில் வைத்து உலர்த்தக் கூடாது.

* பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகள் தனியாக பட்டாசுகளை கொளுத்த அனுமதிக்க கூடாது.

* பறந்து, சீறிப்பாய்ந்து சென்று வெடிக்கும் வகையைச் சேர்ந்த பட்டாசு வகைகளை குடிசைகள், ஓலைக் கூரைகள் உள்ள இடங் களுக்கு அருகில் கொளுத்தக் கூடாது.

* பட்டாசு கடைகளுக்கு அரு கில் புகை பிடிப்பதோ, புகைத்த துண்டுகளை கடை அருகில் கவனக்குறைவாக வீசி எறிவதோ கூடாது.

* பட்டாசு விற்கும் கடை அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோகூட பட்டாசு களை வெடிக்க கூடாது.

* பட்டாசு விற்பனையாளர்கள் மெழுகுவர்த்தி, பெட்ரோமாக்ஸ், சிம்னி விளக்குகளை கடையிலோ, கடை அருகிலோ பயன்படுத்தக் கூடாது.

* பட்டாசுகளை போதுமான இடைவெளி விட்டு கொளுத்த வேண்டும்.

* ஆடு, மாடு, நாய், பூனை போன்ற கால்நடைகளுக்கு அருகில் பட்டாசு களை வெடித்தல் கூடாது.

இவ்வாறு போலீஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து தென் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் கே.சங்கர் கூறும்போது, ‘‘தீபாவளி பண்டிகையை அனை வரும் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதற்காகத்தான் ஆலோசனை வழங்கியுள்ளோம். இதை மீறுபவர்கள், வேண்டும் என்றே விபத்தை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.


News & Events
top