SIVAKASI WEATHER
வலுத்துவரும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் போராட்டம்

13-01-2018
பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகையால் சுற்றுசூழலில் காற்று மாசுபாடு ஏற்படுவதாக பட்டாசு வெடிக்கவும் விற்பனை செய்யவும் உச்சநீதிமன்றம் தடைவிதித்தது . இதனால் பட்டாசு நகரமான சிவகாசியில் பட்டாசு விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது . வடமாநிலங்களில் இருந்து பட்டாசு கொள்முதல் செய்வது முற்றிலும் தடை செய்யபட்டுள்ளதால் பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலார்கள் வறுமையில் வாடி வருகின்றனர் .இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலார்கள் இரண்டு வாரமாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமான சிவகாசி வணிகர்கள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள் . நேற்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உண்ணா விரத போராட்டம் நடத்தினார்கள் இந்நிலையில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்


News & Events
top