SIVAKASI WEATHER
Sivakasi YAMI HERBALS – BATH POWDER

30-01-2018
YAMI HERBALS – BATH POWDER

யாமி ஹெர்பல்ஸ் - குளியல் பொடி

இரசாயனக் கூடமாகிப்போன இன்றைய உலகில் கண்ணைக் கவரும் க்ரீம்களுக்கும், கமகமக்கும் சோப்புகளுக்கும், பளபளக்கும் ஷாம்புகளுக்கும் பஞ்சமில்லை ஆனால் சருமப்பிரச்சனைகளோ.. புதுப்பொலிவோடு .. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து . அதற்கான தீர்வென்றே.. ஒரு தனி வியாபாரம் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது.

ஆயினும் நம் பாட்டியிடம் நாம் கண்ட மிருதுவான ஸ்பரிசமும், அப்பழுக்கற்ற சருமமும், மலர்ந்த பிரகாசமான முகமும்.. ஆயிரகணக்கில் அழகு நிலையத்தில் செலவு செய்தும் கைவரவில்லையே.. ஏன் தெரியுமா? அது தான் இயற்கைக்கும் செயற்கைக்குமான வேறுபாடு.

வியாபாரிகளும், விளம்பரங்களும் மறக்கடித்த.. பக்கவிளைவுகள் இல்லாத.. பாரம்பரியமிக்க இயற்கையான.. எல்லா வயதினருக்கும் ஏற்ற குளியல்பொடியினை பெருமையுடன் ``YAMI HERBALS"ல் அறிமுகப்படுத்துகிறோம்.

குழந்தைகளுக்கு:
பட்டுப்போன்ற மிருதுவான குழந்தையின் சருமத்தை, சோப்புகள் வறட்சியடையச் செய்யலாம். ஆனால் குழந்தைகளுக்கான பிரத்யேகமான எங்களது குளியல் பொடி, அவர்களது சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. நல்ல வாசனையுடன், புத்துணர்ச்சியும் அளித்து.. உங்கள் குழந்தைகளின் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

பெண்களுக்கு:
இயற்கையான.. மூலிகைகள் நிறைந்த எங்களது குளியல் பொடியினை தொடர்ந்து உபயோகித்து வர, வளரும் பருவத்தில் ஏற்படக் கூடிய பரு முதலான சரும பிரச்சனைகளும், மாசுபடிந்த சுற்றுச்சூழலினால் ஏற்படக் கூடிய சருமக் கோளாறுகளும், நாளடைவில் மறைந்து.. உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதுடன் உங்களது சருமத்திற்கு இளமையான தோற்றத்தி னை அளிக்கிறது

ஆண்களுக்கு:
ஆண்களுக்கான குளியல் பொடியில் மஞ்சளுக்கு பதில் பாசிப்பயறு சேர்ப்பதால், முடிகொட்டுமோ என்று அச்சம் கொள்ளத் தேவை இல்லை. மேலும், அது அவர்களது திண்ணமான சருமத்தைப் பொலிவடையச் செய்கிறது.

குளியல் பொடியில் சேர்க்கப்படும் மூலிகைகளும் அதன் பயன்களும்:

பாசிப்ப்யறு:
இது முகப்பரு மற்றும் வறண்ட சருமத்தினை சீர்செய்யும் வரப்பிரசாதம்.மேலும் இயற்கையான முறையில் அழுக்கை நீக்கி சருமத்தை மிளிரச் செய்கிறது.

வேப்ப இலை:
கிருமி நாசினி, சர்வரோக நிவாரணி.

ஆவாரம் பூ:
சூட்டை தணித்து முகப்பொலிவை கூட்டுகிறது

ரோஜா இதழ்கள்:
இயற்கையான ஈர்ப்பதத்தை தக்கவைப்பதுடன் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

கஸ்தூரி மஞ்சள்:
பரு, கொப்பளம் மற்றும் சகலவிதமான தோல் பிரச்சனைகளில் இருந்தும் சருமத்தைக் காக்கிறது. தோல் புற்றுநோயைத் தடுக்கிறது.

வெட்டி வேர்:
கரும் புள்ளிகளை நீக்கி இளமையான தோற்றத்தை அளிக்கிறது.

பூலான் கிழங்கு:
கரும் புள்ளிகள், வடுக்களை நீக்கி சருமத்தை பொலிவாக்குகிறது.

கோரைக் கிழங்கு:
உடல் வெப்பத்தை சீர் செய்கிறது. உடல் துர்நாற்றத்தைக் கட்டுபடுத்தி சருமப் பிரச்சனைகளை சரி செய்கிறது.

கருஞ்சீரகம்:
இது பரு, கொப்பளம், வறண்ட சருமம் மற்றும் சொரியாஸிஸ் எனும் தோல் அழற்சி நோயை சரி செய்கிறது. மேலும் தோல் சுருக்கம், முதிர் தோற்றத்திற்க்கான அறிகுறிகளையும் சரி செய்கிறது.

கற்பக அரிசி:
சருமத்திற்கு ஊட்டச்சத்தளித்து இளமையன தோற்றத்தைத் தருகிறது.

சிகைக் காய்:
இது சருமத்தை சுத்தப்படுத்துவதுடன், சருமத் தொற்றுகளையும் கட்டுபடுத்துகிறது.

உபயோகிக்கும் முறை:

தேவையான அளவு குளியல் பொடியை எடுத்துக்கொள்ளவும்.
அதனுடன் விருப்பத்திற்க்கேற்ப பால் அல்லது நீர் சேர்த்து பசை போல் கலந்து கொள்ளவும்.
அதனை உடல் முழுவதும் தேய்த்து ஐந்து நிமிடம் ஊறிய பின் கழுவிவிடவும்.

(அல்லது)

குளியல் பொடியை நேரடியாக சருமத்தில் தேய்த்து நீரினால் கழுவிவிடவும்.

எங்களது குளியல் பொடி உடலுக்கும் உள்ளத்திற்க்கும் புத்துணர்ச்சி அளிக்க வல்லது. இது உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பல்வேறு நோய்களிலிருந்தும் சரும பிரச்சனைகளிலிருந்தும் காக்கிறது.
குறைந்த செலவில் நிறைந்த பலன்களைத் தரும் எங்களது குளியல் பொடி பற்றி மேலும் விபரம் அறிய தொடர்பு கொள்ளவும்: +91 73588 13032




News & Events
top