SIVAKASI WEATHER
சிவகாசி பட்டாசு

20-08-2018
பட்டாசுக்கு தடை கேட்டு
கோர்ட்டுல மனு போட்டவனுக்கு தெரியாது,
அவனும் சின்னப் புள்ளையா இருக்கும்போது,
புஷ்வானத்தைப் பார்த்து,
மத்தாப்பாய் சிரித்தான் என்று...

எங்க முதலாளிக கூட
எங்களைக் கொடுமைப் படுத்தியதில்லை,
ஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும்,
சோதனை என்ற பெயரில் எங்களை கொடுமைப்படுத்துகின்றனர்.

முகம் தெரியாத பலரை சந்தோசப்படுத்த,
பல உயிர்களை ப(லி)றி கொடுத்துவிட்டுத்தான்,
நாங்களே இந்த தொழில் செய்கிறோம்.
பறிகொடுத்த எங்களுக்கு இல்லாத அக்கறை,
அதிகாரி உங்களுக்கு எங்க இருந்துயா வருது...

மண்ணையும், மருந்தையும்
தின்னுதான்யா வெடிகளை நாங்கள் உருவாக்குகிறோம்...
"தடை கேட்டு கோர்ட்டுக்கு போகிற மகராசா,
எங்களுடைய ஒரு ஜான் வயிற்றுக்குக்கு பதில் சொல்லிவிட்டு போ ராசா"

மாற்றுத் தொழில் போகணும்னா எத்தனை பேருயா போறது?
எங்கே நீயும், இதை ஒரு வழக்காக எடுத்துக்கொண்டு தர்மம் கேட்கும்,
நீதிபதிகளும் மாற்றுத் தொழிலுக்கு வழி சொல்லுங்கள் பார்ப்போம்...

வானம் பார்த்த பூமியிலே,
சேம கிழங்கும், சீனிக்கிழங்குமாயா
விதைக்க முடியும்?

அப்படி என்னய்யா கோபம்,
இந்த கந்தக பூமி மீது உங்களுக்கு!!

புருஷன் செத்தாலும்
மூணு நாள் அழுதுட்டு,
நாலாவது நாளு
கரிமருந்தை தேடி போயிடுவா
அந்த புள்ள,
ஏன்னா
அவ புள்ளைக்கு கஞ்சி ஊத்த,
அவளை விட்டா வேற
நாதியில்லை...!!!


News & Events
top