SIVAKASI WEATHER
பட்டாசு வெடிப்பதை புறக்கணிக்காதீர்கள்: வணிகர்கள் வேண்டுகோள்

05-11-2018
பட்டாசு வெடிப்பதை புறக்கணிக்காதீர்கள்: வணிகர்கள் வேண்டுகோள்

பண்டிகைக் காலங்களிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் கொண்டாட்டங்களின்போதும் பட்டாசு வெடிப்பதை புறக்கணிக் காதீர் என பட்டாசு வணிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பட்டாசு உற்பத் தியாளரும், தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பின் பொதுச் செயலருமான என்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

8 லட்சம் தொழிலாளர்கள்

மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், ஏழை, பணக்காரர், சாதி, மத வேறு பாடின்றி பண்டிகைகள், விழாக்கள், கொண்டாடங்கள், விளையாட்டு, தேர்தல் வெற்றி பிறந்தநாள் விழா, மணவிழா என அனைத்து நிகழ்ச்சிகளிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பட்டாசு இன்றியமையாததாக மாறிவிட்டது.

பட்டாசு தயாரிப்பால் சிவ காசியில் 2 ஆயிரம் தொழில் முனைவோர்களால் சுமார் 3 லட்சம் நேரடித் தொழிலாளர்களும், சார்புத் தொழில்கள் மூலம் சுமார் 8 லட்சம் தொழிலாளர்களும், வணிகர்கள், சிறு வணிகர்கள் என நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி பேரும் இத்தொழிலால் பயன் அடைந்து வருகின்றனர்.

இத்தொழி லுக்கு சிலர் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் பிரச் சாரம் செய்து வருகிறார்கள். பட்டாசு ஆலைகள் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப் பாட்டுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அனுமதிபெற்று சட்ட விதிகளுக்கு உட்பட்டே இயங்குகிறது.

அங்கீகரிக்கப்பட்ட வேதிப் பொருள் களு டன் உச்ச நீதிமன்ற உத்த ரவுக்கு ஏற்ப 125 டெசிபல் ஒலி அளவு கொண்ட பட்டாசுகளே தயாரிக்கப் பட்டு விற்பனை செய்யப் படுகின்றன.

மாசு குறைவுதான்

பட்டாசுகளால் காற்று மாசு என்பது சில நிமிடங்களே உள்ளது. ஆனால், வாகனம், தொழிற்சாலை புகை மற்றும் தந்தூரி அடுப்பு, விவசாயக் கழிவுகளை எரிப்பது, போன்றவை போல, பட்டாசு மாசு அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை புறக்கணிக்காமல் சுதேசித் தொழிலான பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்களை யும் வாழ வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


News & Events
top