SIVAKASI WEATHER
சிவகாசியில் கொரோனா பீதியால் முட்டை விலை வீழ்ச்சி...

19-03-2020
சிவகாசியில் கொரோனா பீதியால் முட்டை விலை வீழ்ச்சி...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக நாமக்கல்லில் 15 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், தமிழகத்தில் சத்துணவு, வெளி மாநிலங்களுக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டதால் முட்டைகள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சிவகாசியில் உள்ள கடைகளில் சென்ற வாரம் ரூ.5.50/-க்கு விற்ற முட்டை தற்போது ரூ.3/- மட்டுமே. முட்டை கொள்முதல் விலை குறைந்தாலும் ஓட்டல்களில் ஆம்லெட் விலை குறைக்கப்படுவதில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். முட்டை விலை குறைந்தாலும் ஓட்டல்களில் ஆம்லெட் விலை குறைக்கப்படுவதில்லை என சிவகாசி பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.


News & Events
top