SIVAKASI WEATHER
சிவகாசி மக்களே

25-05-2021
சிவகாசி மக்களே,

வணக்கம்!

இன்று 25/05/2021) செவ்வாய்கிழமை காலை 9:30 மணியளவில் நம் நகர் சிவகாசி நகராட்சி பழைய அலுவலகத்தில் (காமராஜர் சிலை அருகே) வைத்து 18 வயது முதல் 44வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற உள்ளது.

இதில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட காய்கறி, பலசரக்கு,பால், மருந்துகடை, கோழி,ஆடு ,மீன், உணவக கடைவியாபாரிகள், மேற்படி கடைகளிலுள்ள ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும்.தடுப்பூசி போட விரும்பும் நபர்கள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் சிவகாசி நகராட்சி பழைய அலுவலகத்திற்கு காலை 9:30 மணியளவில் வந்து பயன்பெற அழைக்கிறது சிவகாசி நகராட்சி.

கொரானாவிலிருந்து நம்மை பாதுகாக்க அருமையான கவசம் தடுப்பூசியே...

நன்றி!

News & Events
top