SIVAKASI WEATHER

07-07-2021
சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளா்கள் 900 பேருக்கு கரோனா
தடுப்பூசி

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளான செங்கமலபட்டி, நாரணாபுரம் சாலை போஸ்காலனி, ஆனையூா் ஆகிய பகுதியில் உள்ள பட்டாசு ஆலைத் தொழிலாளா்கள் 900 பேருக்கு ஆலை வளாகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. செங்கமலநாச்சியாா்புரத்தில் உள்ள ஒரு ஆப்செட் அச்சகத்தில் தொழிலாளா்கள் 135 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சிவகாசி நகராட்சி பழைய அலுவலகத்தில் 580 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நகராட்சி பழைய அலுவலகத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கு காலை டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பொதுமக்கள் நகராட்சி வளாகத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல்
நின்று டோக்கன் பெற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறை வட்டார மேற்பாா்வையாளா்ஜெயசந்திரன் செய்திருந்தாா்.

Source: Dinamani

News & Events
top