SIVAKASI WEATHER
கட்சி கொடிகளின் நிறத்தில் பென்சில் தயாரித்து அசத்தும் சிவகாசி நிறுவனம்

24-03-2024
கட்சி கொடிகளின் நிறத்தில் பென்சில் தயாரித்து அசத்தும் சிவகாசி நிறுவனம்

மக்களவை தேர்தல் நெருங்குவதையடுத்து அச்சுத் தொழிலுக்கு பிரசித்தி பெற்ற சிவகாசியில் கட்சிக் கொடிகள், சின்னங்கள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகாசி குணா பென்சில்ஸ் நிறுவனம் சற்று புதுமையாக கட்சி கொடிகளின் வண்ணத்தில் பென்சில்களை தயாரித்து தருகின்றனர். மேலும் கட்சியின் பெயர் மற்றும் வேட்பாளரின் பெயரையும் பென்சிலில் அச்சிட்டு தருகின்றனர். சிவகாசி குணா பென்சில்ஸ் நிறுவனர் திரு. பாஸ்கர்ராஜ் கூறுகையில் "தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் ஆர்வத்துடன் பென்சிலை ஆர்டர் செய்து வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட கூடுதல் உற்பத்தி செய்கிறோம். கட்சியினரின் மீட்டிங், பிரச்சாரத்தின் போது பெரிதாக உதவும் பிராண்ட்டிங் பொருளாக உருவெடுத்துள்ளது இவ்வகை பென்சில்கள். தேர்தலுக்கு மட்டுமின்றி 1996ம் ஆண்டு முதல் பள்ளி, கல்லூரி, கார்ப்பரேட்களுக்கு ஏற்ற வகையில் பென்சில்களை உற்பத்தி செய்து தருகிறோம், என்றார்".

இவரது புதுமையான முயற்சிக்கு வாழ்த்துகள். இவரை பாராட்ட அழையுங்கள் 9443388980 9944970980 என்ற எண்களை.


News & Events
top