கல்லூரியில் சுற்றுச்சூ&#

24-02-2011
கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்

சிவகாசி, பிப். 23: சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ். கண்மணி தலைமை வகித்தார். துணை முதல்வர் அ. சுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்ச் செல்வி சிறப்புரையாற்றி இயக்கத்தைத் தொடக்கி வைத்தார்.

வெப்பமயமாதல் கையேடு, சோலைக் காடுகள், புலிகளின் உண்மை நிலை என்ற இரு குறும்படங்கள் திரையிடப்பட்டன. விரிவுரையாளர் வைரமுத்து நன்றி கூறினார்.

News & Events