Ayya Nadar Janaki Ammal College - Department of Science - Competition 2011
10-03-2011 கல்லூரியில் அறிவியல் போட்டி சிவகாசி, மார்ச் 8: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் முதுகலை அறிவியல் துறை சார்பில், கல்லூரிகளுக்கிடையிலான அறிவியல் தொடர்பான போட்டிகள் நடைபெற்றன. இதில் 8 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேச்சு, கட்டுரை, ஓவியம், விநாடி-வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியை கல்லூரி முதல்வர் எஸ்.பாஸ்கரன் தொடக்கி வைத்தார். இப் போட்டியில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதலிடமும், மதுரை தியாகராஜர் கல்லூரி இரண்டாமிடமும், மதுரை லேடி டோக் கல்லூரி மூன்றாமிடமும் பெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு துறைத் தலைவர் கணேசன் பரிசு வழங்கினார். மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி இணைப் பேராசிரியர் எஸ்.ரத்தினவேல் வாழ்த்துரை வழங்கினார். கே. லிங்ககுமார் நன்றி கூறினார். |