Sivakasi Central Rotary Club - Governor Visit 2011


10-03-2011
சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்கத்திற்கு ஆளுநர் வருகை

சிவகாசி, மார்ச் 8: சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்கத்திற்கு சங்க மாவட்ட ஆளுநர் ஜெ.கே.குமார் வருகை புரிந்தார்.

இதையொட்டி நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத் தலைவர் கே.சுரேஷ்தர்ஹர் தலைமை வகித்தார். செயலாளர் எல்.அசோக் ஆண்டறிக்கை வாசித்தார்.

சங்க மாவட்ட ஆளுநர் ஜெ.கே.குமார் கல்லூரி மாணவர் ஒருவருக்கு கணினியையும், ஏழைப் பெண் ஒருவருக்கு தையல் இயந்திரமும் வழங்கினார். அழகன் சேவா சங்கத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர்.

துணை ஆளுநர் ஏ.ஆர்.பாஸ்கரராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சமுதாய சேவை இயக்குநர் எஸ்.பி.ஜெய்சங்கர், கிளப் சேவை இயக்குநர் பி.வேம்பார், அட்வைசரி கமிட்டி உறுப்பினர்கள் டி.கதிரேசன், டி.அண்ணாமலையான், முன்னாள் தலைவர்கள் மோகன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொருளாளர் எம்.பழனிசெல்வம் நன்றி கூறினார்.

News & Events