Sri Kaliswari College Seminar 2011 - Deaprtment of Mathematcis


12-03-2011
காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கம்

சிவகாசி, மார்ச் 10: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கணிப்பொறித் துறை சார்பில், நேர்முகத் தேர்வின் நுணுக்கங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்புக்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் எஸ்.கண்மணி தலைமை வகித்தார். கணினிஅறிவியல் துறை பேராசிரியர் வே.ராஜேஷ் வரவேற்றார். துணை முதல்வர் அ.சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார்.

மலேஷிய இன்டோமைஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் இரா.ஈஸ்வரமூரத்தி, நேர்முகத்தேர்வுக்குச் செல்லும்போது நேர்த்தியான ஆடை அணியவேண்டும் என்றும், நேர்முகத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும், பயோ-டேட்டாவில் என்னனென்ன இடம் பெற வேண்டும் என்பது குறித்தும் அவர் பேசினார்.

மாணவி டி.நாகஜோதி நன்றி கூறினார்.

News & Events