2011 Women-s day celebration in Pallapatti
12-03-2011 பள்ளபட்டியில் மகளிர் தின விழா சிவகாசி, மார்ச் 10: சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில், சிவகாசி அருகே பள்ளபட்டியில் மகளிர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அந்த அறக்கட்டளையின் அறங்காவலர் ஹேமலதா ராஜன் தலைமை வகித்தார். பொது மேலாளர் ஜோயல் வரவேற்றார். மதுரை வழக்கறிஞர் லஷ்மி கோபிநாத், கவிஞர் திலகபாமா, பள்ளபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பார்வதி நாராயணன், துணைத் தலைவர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் பேசினர். பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு ஹேமலதா ராஜன் பரிசு வழங்கினார். ஏற்பாட்டினை திட்ட மேலாளர் தயாநிதி, ஒருங்கிணைப்பாளர் முத்துராமன் ஆகியோர் செய்திருந்தனர். |