Free Medical Camp for Children 2011


18-03-2011
குழந்தைகள் மருத்துவ முகாம்

சிவகாசி, மார்ச் 16: சிவகாசி தொழில்நகர் அரிமா சங்கம் மற்றும் சிவகாசி டாக்டர்கள் சங்கம் சார்பில், குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் டி. ராஜசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் ஆர். பகவதிகுமார் வரவேற்றார். குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் வி.கே. கதிரவன், சிவகாசி அரசு மருத்துவமனை டாக்டர் டி. அய்யனார் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், குழந்தைகளைப் பரிசோதித்து இலவச மருந்து, மாத்திரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

சங்கப் பொருளாளர் நன்றி கூறினார்.

முகாமுக்கான ஏற்பாட்டை திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். பெரியசாமி செய்திருந்தார்.

News & Events