Shuttle Badminton Training Camp 2011 - AJ Stadium Sivakasi |
19-03-2011 சிவகாசியில் ஏப்.14 இறகுப்பந்து பயிற்சி முகாம் தொடக்கம் சிவகாசி, மார்ச் 18: விருதுநகர் மாவட்ட இறகுப் பந்துக் கழகம் சார்பில் சிவகாசி ஏ.ஜெ. உள் விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 14-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கோடைகால இறகுப்பந்து பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக ஏ.ஜெ.விளையாட்டு அரங்கச் செயலாளர் எஸ்.வி.செந்தியப்பன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 7 முதல் 16 வயது உள்ளவர்கள் சேரலாம். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு டீஷர்ட், ஷு, பந்து உள்ளிட்டவை வழங்கப்படும். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் மருத்துவச் சான்று கொடுக்க வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரம் அறிய 99949-20063 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றார். |