Sivakasi DMK Candidate - Vanaraja |
19-03-2011 சிவகாசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் சிவகாசி, மார்ச் 18: சிவகாசி தொகுதி தி.மு.க. வேட்பாளராக, சிவகாசி ஒன்றியக்குழுத் தலைவரும், கட்சியின் ஒன்றியச் செயலாளருமான டி.வனராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை கு.தங்கராஜ் தேவர். தாய் த.முனியம்மாள். பிறந்த ஊர் சிவகாசி வட்டம், கோபாலன்பட்டி. பிறந்த தேதி 18.01.1960. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு வ.மோகன்ராஜ், வ.விவேகன்ராஜ், வ.சுரேஷ்குமார் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். 2001 முதல் சிவகாசி ஒன்றியத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இவர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. |