Sri Kaliswari College

25-01-2011
சிவகாசி, ஜன. 24: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில், புதிய தொழிலை அடையாளம் காணுதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

துறை இயக்குநர் க.நடராஜன் தலைமை வகித்தார். மாணவி டி.கார்த்திகா வரவேற்றார்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டுக் குழு ஆலோசகர் எம்.ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். புதிய தொழிலை அடையாளம் காணுவதற்குறிய அடிப்படைக் கூறுகள், திறமைகள் குறித்தும், பொருளாதாரம், மனித வளம், அரசு கட்டுப்பாடுகள், ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும், புதிய தொழில் தொடங்குவதற்குத் தேவையான திட்டங்களைக் கண்டறியும் வழிமுறைகள் குறித்தும் பேசினார். மாணவர் வி.மாரிமுத்து நன்றி கூறினார்.

News & Events