SIVAKASI WEATHER
Sivakasi Lions Cracker City - Governor visit 2011

22-03-2011
அரிமா மாவட்ட ஆளுநர் சிவகாசி வருகை

சிவகாசி, மார்ச் 21: சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கத்துக்கு, சங்க மாவட்ட ஆளுநர் பி.ஓ.பி. ராமசாமி வருகை புரிந்தார்.

இதற்காக நடைபெற்ற கூட்டத்துக்கு அச் சங்கத் தலைவர் ஆர்.ராஜேஷ் தலைமை வகித்தார்.கண்தாண மாவட்டத் தலைவர் ஜெ. கணேஷ் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராமதாஸ் வரவேற்றார்.

செயலாளர் வினோத்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.சங்க மாவட்ட ஆளுநர் பி.ஓ.பி. ராமசாமி கண்தானம் செய்த குடும்பத்தினரை பாராட்டி பரிசு வழங்கினார்.

சிவகாசி அரசு மருத்துவமனைக்கு இரு தண்ணீர்த் தொட்டிகளும், சாரதா ஆதரவற்றோர் இலலத்துக்கு தண்ணீரைச் சுத்திகரிக்கும் இயந்திரமும்,உடல் ஊனமுற்ற கல்லூரி மாணவி உள்பட இருவருக்கு மூன்று சக்கர சைக்கிளும், இருவருக்கு தையல் இயந்திரமும், சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளிக்கு ஒரு மேஜையும் சேவை திட்டங்களாக வழங்கப்பட்டன.

முன்னதாக, சாத்தூர் ரயில் நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சிய

News & Events
top