Head to Head - DMK vs. ADMK - Election 2011

22-03-2011
சிவகாசியில் தி.மு.க.- அ.தி.மு.க. நேரடிப் போட்டி

சிவகாசி, மார்ச் 21:

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் திமுக-அதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

சிவகாசி தொகுதியில் திமுக வேட்பாளராக சிவகாசி ஒன்றியக் குழுத் தலைவரான டி.வனராஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளராக திருத்தங்கல் நகர்மன்றத் துணைத் தலைவர் கே.டி. ராஜேந்திரபாலாஜி அறிவிக்கப்பட்டுள்ளார்.

1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் கா.காளிமுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனதா கட்சியின் கே.ராமசாமி 2461 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் டி.ஜி. தர்மர் 22,746 வாக்குகளும், அதிமுக கே. பொன்னுபாண்டியன் 22315 வாக்குகளும், திமுக எஸ்.அமுதன் 7755 வாக்குகளும் பெற்றனர்.

பின்னர் 1980-ல் திமுக, அதிமுக நேரடியாக மோதியது.

இதில் அதிமுக.வைச் சேரĮ

News & Events