Election - Wallposter ban |
23-03-2011 தனியார் சுவர்களில் தேர்தல் விளம்பரம் எழுதத் தடை சிவகாசி, மார்ச் 22: தனியார் சுவர்களில் தேர்தல் விளம்பரம் எழுதத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற உள்ளது. அரசு மற்றும் தனியார் சுவர்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் விளம்பரங்களை வருவாய் மற்றும் காவல் துறையினர் அழித்தனர். அனைத்துக் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன. இந் நிலையில் தனியார் சுவர்களில் அனுமதி பெற்றும் தேர்தல் விளம்பரம் செய்ய க் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இதுபோன்ற கெடுபிடிகளால், வேட்பாளர்கள் எப்படித்தான் விளம்பரம் செய்வது எனக் கட்சியினர் புலம்புகின்றனர். |