Election 2011 - Election officer visited Sivakasi

29-03-2011
கல்வியியல் தேர்தல் பார்வையாளர் சிவகாசி வருகை

சிவகாசி, மார்ச் 27: சிவகாசி மற்றும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர் அருண்குமார் பாண்டே சனிக்கிழமை இரவு சிவகாசி வந்தார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை சாத்தூர் மற்றும் சிவகாசியில் நடைபெற்ற தேர்தல் அலுவர்களுக்க்கான பயிற்சி முகாமைப் பார்வையிட்டார்.

சாதனை மகளிருக்கு விருதுகள் வழங்கல்

ராமநாதபுரம்,மார்ச் 27: ராமநாதபுரத்தில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த மகளிருக்கு விருதுகள் வழங்கும் விழா, ரோட்டரி சங்க மகாலில் இன்னர்வீல் சங்கத் தலைவர் லெட்சுமிவர்த்தினி ராஜேஸ்வரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி இன்னர்வீல் சங்கம்,ஆனந்தம் பட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து உலக மகளிர் தின விழாவை நடத்தின.

இவ்விழாவுக்கு சங்கச் செயலாளர் கவிதா சசிக்குமார்,சங்க நிர்வாகிகள் கீர்த்திகா, அமுதவல்லி, யோகின்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


News & Events