Arasan Ganesan College of Education 2011 - Training Camp 2011


29-03-2011
கல்வியியல் கல்லூரியில் பயிற்சி முகாம்

சிவகாசி, மார்ச் 27: சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் வாழ்க்கையைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் ஏ.பி. செல்வக்குமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜி.பாண்டியன் வரவேற்றார்.

செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் எஸ். சிவன்மூர்த்தி சிறப்புரையாற்றினார். அம்மா என்ற குறும்படம் திரையிடப்பட்டது. மாணவர் பிரவீன்ராஜ் நன்றி கூறினார்.

News & Events