M.K. Stalins Sivakasi Visit - Election 2011 - DMK T.Vanaraja
01-04-2011 நலத் திட்ட உதவிகள் தொடர தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துங்கள் - மு.க. ஸ்டாலின் சிவகாசி, மார்ச் 31: கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் நலத் திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்திட நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவை ஆதரியுங்கள் எனக் கேட்டுக் கொண்டார் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். சிவகாசியில் வியாழக்கிழமை சிவகாசி தொகுதி திமுக வேட்பாளர் டி. வனராஜாவை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். சிவகாசி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, திருத்தங்கல், சிவகாசி ரத்தினவிலாஸ் பஸ் நிறுத்தம், பஸ் நிலையம் மற்றும் சிவன் கோவில் முன்பு ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் மேலும் பேசியதாவது: 2006 ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றபோது, திமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் திமுக வெற்றி பெறும். அப்போது கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்பார். சிவகாசி தொகுதியில் போட்டியிடும் வனரĬ |