K.T. Rajendra Balaji ADMK Candidate - Sivakasi Assembly constituency - Election 2011


01-04-2011
சிவகாசியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

சிவகாசி, மார்ச் 30: சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி. ராஜேந்திரபாலாஜி புதன்கிழமை தொகுதிக்குள்பட்ட நாரணாபுரம், போஸ் காலனி, செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, ரத்தினவிலாஸ் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், சிவகாசி பஸ் நிலையத்தை விரிவாக்கவும், திருத்தங்கலில் பஸ் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். கண்மாய்களை தூர் வாரவும், நீர்வரத்துக் கால்வாய்களைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். குக்கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் என்றார்.

அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் ஜெயசந்திரன், புதிய தமிழகம் நிர்வாகி கார்த்திக் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சமுத்திரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேவா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

News & Events