மாணவர்களுக்கு சமுதாய சி&

04-04-2011
மாணவர்களுக்கு சமுதாய சிந்தனை வேண்டும்: நீதிபதி

சிவகாசி, ஏப். 2: கல்லூரி மாணவர்களுக்கு சமுதாய சிந்தனை வேண்டும் என விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி 12வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:

மாதா, பிதா, குரு,தெய்வம் என நமது காலசாரம் உள்ளது. ஆனால் தற்போது பலர் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுகிறார்கள். இது வருந்தத்தக்கது. இந்தியாவின் பெருமையே நமது கலாசாரம்தான் என்பதை மாணவர்கள் மறந்துவிடக் கூடாது.

மாணவர்கள் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக்கிக் கொள்ளுங்கள். தற்போது கணவனும், மனைவியும் வேலைக்குச் செல்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்குப் போதிய அன்பு கிடைக்கவில்லை என நான் கருதுகிறேன்.

மேலும் டி.வி. பார்க்கும் கலாசாரம் பரவிவிட்டது. டி.வி.யில் மூழ்கியிருப்பவர்களை திருத்த முடியாது. ஓவியம், நடனம், நாட்டியம் உள்ளிட்டவை வ&#

News & Events