SIVAKASI WEATHER
Mepco Schlenk Engineering College - Convocation Function 2011

04-04-2011
மெப்கோசிலங் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

சிவகாசி, ஏப். 2: சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குத் தாளாளர் ஏ.டென்சிங் தலைமை வகித்தார். முதல்வர் எஸ்.பாலகிருஷ்ணன் வரவேற்றார். சென்னை சி.டி.எஸ். நிறுவனத் துணைத் தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி பேசியதாவது:

அனைத்துத் துறைகளிலும் புதிய தொழில்நுட்பம் வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்த தகவல்களை புத்தகங்கள், இணையதளங்கள் மூலமாகப் பெற வேண்டும். தனித் திறமையை வெளிக்கொண்டு வந்து செயல்பட வேண்டும்.

உலகம் முழுவதும் இந்தியர்கள் ஜெயிப்பதற்குக் காரணம் அவர்களது உழைப்புதான் என்பதை மறக்கக்கூடாது. அமெரிக்கர்கள் கணினியில் 4 மணி நேரம்தான் பணிபுரிவார்கள். நம்மவர்கள் 10 மணி நேரம் புரிவார்கள். எனவே உலகில் இந்தியர்களின் உழைப்பு தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.

வெற்றியாளர்களை உலகம் திரும்பிப் பார்க்கும். நீங்கள் வெற்றியாள&

News & Events
top