K.T. Rajendra Balaji ADMK Candidate Sivakasi Assembly constituency - Election 2011
06-04-2011 பம்பா-அச்சங்கோவில் திட்டத்தை நிறைவேற்றப் பாடுபடுவேன் : அதிமுக வேட்பாளர் சிவகாசி, ஏப். 5: பம்பா-அச்சங்கோவில் வைப்பாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றப் பாடுபடுவேன் என சிவகாசி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.டி.ராஜேந்திபாலாஜி கூறினார். சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள அய்யனார் காலனி, கிரகத்தாயம்மாள் நகர், பி.எஸ்.ஆர். நகர், திருப்பதி நகர், காயாம்பு நகர், சித்துராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பேசியதாவது: நான் வெற்றி பெற்றால் பம்பா-அச்சங்கோவில்-வைப்பார் நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவேன். இந்தத் திட்டம் மூலம் விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதியும், விவாசாயத்திற்குப் போதிய தண்ணீரும் வழங்க இயலும். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இரு மாவட்டங்களும் பொருளாதார வளர்ச்சி பெறும். இந்தத் திட்டத்தை நிறைவேற்றப் பĬ |