T.Vanaraja DMK candidate - Sivakasi Assembly constituency - Election 2011
06-04-2011 தொழில் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன் : திமுக வேட்பாளர் டி.வனராஜா சிவகாசி, ஏப். 5: சிவகாசி தொகுதியில் தொழில் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என சிவகாசி தொகுதி திமுக வேட்பாளர் டி.வனராஜா கூறினார். சிவகாசி நகராட்சி 27, 28, 29 ஆகிய வார்டுகளில் வாக்குச் சேகரித்தார் வனராஜா. அவர் பேசியதாவது: சிவகாசி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் இங்குள்ள தொழில்கள் மேலும் வளர்ச்சி பெற பாடுபடுவேன். இந்தத் தொகுயில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்துவேன். சிறு தொழில்களை பாதுகாப்பேன். இந்தத் தொகுதியில் உள்ள நூற்பு ஆலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார். வேட்பாளருடன் நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி.அசோகன், திமுக இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ், விருதுநகர் மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக் உள்ளிட்டோர் சென்றனர். |