Ambedkar Birthday Celebration in Sivakasi - 2011


15-04-2011
அம்பேத்கர் பிறந்த நாள் விழா

சிவகாசி, ஏப். 14: சிவகாசியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பல்வேறு அமைப்புகள் சார்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

அருந்ததியர் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் தலைவர் பாண்டியன், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் மாவட்டத் தலைவர் ஏ.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மைப் பிரிவு சார்பில், அவ்வமைப்பின் மாநில சிறுபான்மைப் பிரிவு செயற்குழு உறுப்பினர் ஜோசப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் நகரத் தலைவர் தங்கராஜன், நகர பொதுச் செயலாளர் ஹரிகேசவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News & Events