Mepco Schlenk Engineering College - Civil Engineering Department 2011
15-04-2011 பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம் சிவகாசி, ஏப். 14: சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரியில் கட்டடவியல் துறை சார்பில் கட்டடவியல் மேம்பாடுகளும் புதிய கட்டுமான முறைகளும் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் பிரபாவதி வரவேற்றார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி அமைப்பியல் துறைத் தலைவர் முனைவர் அருணாசலம் சிறப்புரையாற்றினார். விழா மலரை அருணாசலம் வெளியிட, முதல்வர் பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். கருத்தரங்கில் 51 ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. |