SIVAKASI WEATHER
Sivakasi - Election day 2011

15-04-2011
சிவகாசியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சிவகாசி, ஏப். 13: சிவகாசி சட்டப்பேரவை தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் 81 சதவீத வாக்குகள் பதிவானதாக கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சி.முனுசாமி தெரிவித்தார்.

சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, திமுக வேட்பாளர் டி. வனராஜா, பாஜக மீராதேவி, பகுஜன்சமாஜ் கட்சி கமலவேல்செல்வன், 12 சுயேச்சைகள் உள்ளிட்ட 16 பேர் போட்டியிட்டனர். தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 1,82,052. இதில் ஆண் வாக்காளர்கள் 90,360. பெண் வாக்காளர்கள் 91,692.

210 வாக்குச் சாவடிகள் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்தன. 22 மண்டல அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இத்தொகுதியில் பகல் 12 மணியளவில் 46 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பிற்பகல் 3 மணியளவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின.

மாலை 5 மணிவரை மொத்தம் 81 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் பார்வையாளர் அருண் பாண்டே பல வாக்குச் சாவடிகளுக்கு நேர&

News & Events
top