SIVAKASI WEATHER
Robbers tried to cut open Sivakasi LVB ATM - 2011

04-05-2011
சிவகாசி வங்கி ஏ.டி.எம்.மில் பணம் கொள்ளை முயற்சி

சிவகாசி, மே 3: சிவகாசியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கிக் கிளையின் ஏ.டி.எம்.மில் பணம் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

சிவகாசியில் லட்சுமி விலாஸ் வங்கிக் கிளையானது ரயில்வே பீடர் சாலையில் உள்ளது. வங்கியின் முன்புறம் ஏ.டி.எம். உள்ளது. வழக்கம் போல வங்கியை திங்கள்கிழமை இரவு பூட்டிவிட்டுச் சென்றனர். செவ்வாய்க்கிழமை காலை சுமார் 9 மணியளவில் வாடிக்கையாளர் ஒருவர் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்தபோது, அதிலிருந்த கண்காணிப்புக் காமிரா சேதமடைந்திருந்ததாம். இதையடுத்து அவர் வங்கி ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.

ஊழியர்கள் வங்கிக்கு வந்து பார்த்தபோது, ஏ.டி.எம்.மில் பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றிருந்தது தெரியவந்தது. ஏ.டி.எம்.மில் உள்ள காமிரா சேதப்படுத்தப்பட்டுள்ளது. தொடுதிரையும் சேதமடைந்திருந்தது.

பணம் வரும் பகுதியில் எதையோ கொண்டு தட்டியதைப் போல நெளிந்து காணப்பட்டது. இ

News & Events
top