2011 College Day Celebration in Sankaralingam Bhuvaneswari Pharmacy College
06-05-2011 கல்லூரி ஆண்டு விழா சிவகாசி, மே 5: சிவகாசி சங்கரலிங்கம் புவனேஸ்வரி பார்மஸி கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலாளர் பி.தர்மர் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஆர்.சுதர்சிங் வரவேற்றார். முதல்வர் ஏ.தங்கத்திருப்பதி ஆண்டறிக்கை வாசித்தார். மருத்துவம் மற்றும் கிராம நல வாழ்வு சேவைத் துறை இணை இயக்குநர் ஜி.அஜிகண்ணம்மாள் சிறப்புரையாற்றி, பாடங்களில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கினார். பேராசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். |