Thol Thirumavalavan in Sivakasi 2011

10-05-2011
தொல்.திருமாவளவன் சிவகாசி வருகை

சிவகாசி, மே 7: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை சிவகாசி வருகிறார்.

கார் மூலம் திருத்தங்கல் வரும் அவர் அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் சத்யா நகரில் கட்சிக் கொடியேற்றுகிறார். இளம் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் நடைபெறும் சைக்கிள் பேரணியை தொடக்கிவைக்கிறார்.

இதையடுத்து சிவகாசியில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் இலங்கைப் பிரச்னைக்காக உயிர்நீத்த கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பனையடிபட்டியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கிறார்.

News & Events