Shuttle Badminton - Training - AJ Stadium Sivakasi
17-05-2011 இறகுப் பந்து விளையாட்டுப் பயிற்சி சிவகாசி, மே 15: விருதுநகர் மாவட்ட இறகுப் பந்துக் கழகம் சார்பில், இறகுப் பந்து விளையாட்டுப் பயிற்சி முகாம் சிவகாசி வேலாயுதம் சாலையில் உள்ள ஏ.ஜெ.உள்விளையாட்டு அரங்கில் 15 நாள் நடைபெற்றது. முகாமில் 38 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தேசிய அளவிலான பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர். நிறைவு விழாவில் பயிற்சி பெற்றவர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் பெருமாள் ராமானுஜம் சான்றிதழ்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை ஏ.ஜெ.விளையாட்டு அரங்கச் செயலாளர் செந்தியப்பன் செய்திருந்தார். |