2011 State level basket ball tournament in Sivakasi
17-05-2011 சிவகாசியில் மே 27 மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சிவகாசி, மே 14: சிவகாசி வாரியர்ஸ் ஸ்போட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டி, மே 27 முதல் 29 வரை நடைபெற உள்ளதாக கிளப் தலைவர் ரகுபதி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: இப்போட்டிகள் ரிசர்வ் லயன் பாரதி நகரில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். போட்டியில் தமிழகத்தின் தலைசிறந்த 30 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டிகள் பகல், இரவு ஆட்டங்களாக நடைபெறும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்படும் என்றார். |