Free Medical Camp


01-02-2011
இலவச மருத்துவ முகாம்

சிவகாசி, ஜன. 30: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி சமூகநலப் பணிக் குழு, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் கிருஷ்ணப்பேரியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை முதல்வர் எஸ்.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். சிவகாசி அரசு மருத்துவமனை டாக்டர் அய்யனார், இதய நோய் நிபுணர் மா.செந்தில்பாபு ஆகியோர் தலைமையிலான குழு 148 பேரைப் பரிசோதனை செய்தது.

தேவைப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாட்டினை சமூகநலப் பணிக் குழுப் பொறுப்பாளர் சோ.முத்தமிழ்செல்வன், இளைஞர் செஞ்சிலுவை சங்கப் பொறுப்பாளர் எஸ்.இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.

News & Events