MEPCO Schlenk Engineering College NSS Camp
01-02-2011 சிவகாசி, ஜன. 30: சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம் பாவளக்குறிச்சி கிராமத்தில் தொடங்கியது. முதல்வர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தார். இதில் மரக்கன்றுகள் நடுதல், கோயில் சுத்தம் செய்தல், சமூக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாட்டினை திட்ட அலுவலர்கள் சரவணக்குமார், துரைபாஸ்கர் ஆகியோர் செய்திருந்தனர். சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம் சாரதா ஆஸ்ரமத்தில் நடைபெற்றது. மாணவிகள் ஆஸ்ரமத்தை சுத்தம் செய்தனர். அங்குள்ள குழந்தைகளுக்குப் பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டினை திட்ட அலுவலர்கள் அங்கயற்கண்ணி, பாலாமணி,விஷ்ணுபிரியா, ஸ்ரீதேவி ஆகியோர் செய்திருந்தனர். |