Swadeshi Awareness Programme in Sivakasi

27-05-2011
சுதேசி விழிப்புணர்வு ரத யாத்திரை: நாளை சிவகாசி வருகை

சிவகாசி, மே 25: சுதேசி விழிப்புணர்வு ரத யாத்திரை, சிவகாசிக்கு மே 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வருகை தர உள்ளதாக, சுதேசி இயக்க சிவகாசி கன்வீனர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:

சில்லறை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது எனவும், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது என பொதுமக்களிடையே விழிப்புணர்வை எற்படுத்தவும், நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை சுதேசி விழிப்புணர்வு ரத யாத்திரை செல்கிறது.

இதற்கான ஏற்பாட்டினை சுதேசி இயக்க நிறுவனரும், பத்திரிகையாளருமான குருமூர்த்தி செய்துள்ளார்.

சில்லறை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களும், இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்களும் நுழைந்துவிட்டால், இங்குள்ள லட்சக்கணக்கான சில்லறை வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுவர்.

மேலும், கோடிக்கணக்கானோர் வேலை இழக்க

News & Events