Opening ceremony of Khadi Gram Udyog in Sivakasi


01-06-2011
Opening ceremony of Khadi Gram Udyog in Sivakasi

சிவகாசி, மே 30: ராமநாதபுரம் மத்திய சர்வோதயா சங்கம் சார்பில் சிவகாசியில் திங்கள்கிழமை காதி கிராமோத்யோக் பவன் திறக்கப்பட்டது.

சிவகாசியில் புதுரோடு பகுதியில் ஏற்கெனவே இயங்கி வந்த இக்கடை ரூ.12 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காதி கிராமோத்யோக் பவன் கோட்ட இயக்குநர் கே.பி.லலிதாமணி தலைமை வகித்தார். என்.ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம் குத்துவிளக்கேற்றி கடையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கனரா வங்கி மேலாளர் பி.எப்.தினேஷ், தொழிலதிபர்கள் கே.ரவிச்சந்திரன், ஆர்.கோவிந்த நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கடையில் பட்டுச் சேலைகள், கதர் வேஷ்டிகள், ரெடிமேட் சட்டைகள், எம்பிராய்டரி சேலைகள், மர பீரோ, குளியல் சோப், பரிசுப் பொருள்கள், ஸ்கூல் பேக் உள்ளிட்டவை விற்பனைக்கு உள்ளன. எஸ்.சீனிவாசன் நன்றி கூறினார்.

News & Events