Free Government rice distribution begins in Sivakasi from today


01-06-2011
இலவச அரிசி வழங்கும் திட்டம் சிவகாசியில் இன்று தொடக்கம்

சிவகாசி, மே 31: சிவகாசி வட்டத்தில் தமிழக அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது.

தமிழக அரசு, தகுதியுள்ள அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் ஜூன் 1-ம் தேதி முதல் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்க உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அலுலவலர் ராமன், கோட்டாட்சியர் சி.முனுசாமி, வட்டாட்சியர் ராமச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News & Events