Robbery in Sivakasi |
01-06-2011 சிவகாசியில் கத்தியைக் காட்டி 17 பவுன் நகை, பணம் கொள்ளை ஸ்ரீவில்லிபுத்தூர், மே 31: சிவகாசியில் செவ்வாய்க்கிழமை பகலில் வீட்டில் தனியே இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 17 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.1000 கொள்ளையடித்துச் சென்ற இரு இளைஞர்களைப் போலீஸรดர் தேடி வருகின்றனர். சிவகாசி மேற்கு சிவா நகரில் வசிப்பவர் ரமேஷ். இவரது மனைவி வசந்தி (20). இவர்களுக்கு 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. ரமேஷ் மஸ்கட்டில் வேலை செய்து வருகிறார். வசந்தி வீட்டில் தனியே இருந்து வருகிறார். இந் நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் வசந்தி வீட்டிற்கு வந்து காலிங் பெல்லை அமுக்கியுள்ளனர். வசந்தி, என்ன என்று கேட்டுள்ளார். இளைஞர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் எடுக்க வசந்தி சென்றபோது, இரு இளைஞர்களும் வீட்டினுள் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு, பீர& |