Arundhadhiyar Meeting in Sivakasi


06-06-2011
அருந்ததியர் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம்

சிவகாசி, ஜூன் 5: விருதுநகர் மாவட்ட அருந்ததியர் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம் சிவகாசி அருகே கட்டளைப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சீனிவாசன், சட்ட ஆலோசகர் நாகராஜ், மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் அரங்கப்பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் முனியாண்டி, ஒன்றிய துணைச் செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் பேசினர்.

மாவட்டத்தில் உள்ள அருந்ததியர்கள் பொருளாதார வளர்ச்சி அடைய ஆண்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் பெற முயற்சி செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News & Events